ஆட்சியை விட்டு கோட்டாபய ஓடியது ஏன்..! காரணத்தை விளக்கும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றபோதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாமல் கோட்டாபய(gotabaya) இடைநடுவில் கைவிட்டு சென்றது ஏன் என்பதை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது
நிறைவேற்று அதிகாரம் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றில் இருந்தாலும் மக்கள் நம்பிக்கையின்றி எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.
கோட்டாபயவின் ஆட்சி சிறந்த உதாரணம்
69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இரண்டரை வருடங்கள் மாத்திரமே நாட்டை ஆட்சி செய்தமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |