கேள்விக்குறியாகிய மே தினம்: அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஏற்பட்டுள்ள நிலைமை
இந்த அரசாங்கம் கூறுவது போன்று தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டால் மே தினத்தை கொண்டாடுவதையும் தடை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்கங்கள் வேலை அமர்வுகளை எட்டு மணி நேரத்திற்குள் மட்டுப்படுத்திய போராட்டத்தை நினைவுகூரும் வகையில் மே தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாட்டில் தொழிற்சங்கங்கள்இல்லாமல் போனால், தொழிற்சங்கங்களின் சாதனையை நினைவுகூர முடியாது," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாறுகள்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணராச்சி தொழிற்சங்கங்கள் இல்லாத நாடு உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்போது, தொழிற்சங்க நடவடிக்கைகளின் வரலாறுகள் இல்லாதொழியும் என்றும் எதிர்கால சந்ததியினருக்கு அதைபற்றி பாடம் எடுத்து தெரியப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டால் மே தினத்தை கொண்டாடுவதையும் தடை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்