விடுதலைப்புலிகளை வடக்கு மக்கள் ஏன் தெரிவு செய்தனர்
முன்னாள் அதிபர் ஜே.ஆர் ஜயவர்தன, அக்காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலைக் காலந்தாழ்த்தியமையாலேயே வடக்கு மக்கள் விடுதலைப்புலிகளை மாற்றுவழியாக தெரிவு செய்யும் சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தேர்தலை நடத்தவில்லை என்றால் மக்கள் மாற்றுவழிகளை தெரிவு செய்வார்கள் எனவும் அரசாங்கத்துக்கு எச்சரித்தார்.
தேர்தலை நடத்தக்கூடப் பணமில்லை என்கிறார்கள். இதனாலேயே தேர்தல் நடத்த வேண்டும் என நாம் கூறுகிறோம். சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலைக் கைப்பற்றியதுபோல அரசாங்கத்தை கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.
பதவிகளை கட்டி காக்க முயற்சி
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தால் மாத்திரம் நாட்டின் ஊழல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது.
இதுவொரு நஞ்சு. அதிபர், பிரதமர் ஆகியோர் மக்களின் வாக்குகளால் ஒருபோதும் அப்பதவிகளுக்கு வர முடியாது என்பதால் அந்தப் பதவிகளை தொடர்ந்து வைத்திருக்க உள்ளூராட்சி மன்ற தேர்தலைக் காலந்தாழ்த்தப் பார்க்கிறார்கள்.
தேர்தலைக் காலந்தாழ்த்தினால்
ஆனால்
தேர்தலைக் காலந்தாழ்த்தினால்
என்ன நடக்கும் என்பது
தொடர்பான அனுபவங்களை
நாடு கொண்டிருக்கிறது என
தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
