தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

Jaffna Mavai Senathirajah ITAK
By Sumithiran Oct 13, 2024 03:19 PM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின்(itak) தலைமைப் பதவியில் இருந்து தான் ஏன் விலகினேன் என்பதற்கான காரணத்தை மாவை சேனாதிராசா(mavai senathirajah) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா(kv.thavarasa) தலைமையிலான தரப்பினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளமை வருமாறு,

தலைமைப் பொறுப்பினை துறந்தேன்

கட்சியில் எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன். எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கான வலுவான சக்தியாக மாற்றுவதற்காக பணியாற்றவுள்ளதாக குறிப்பிட்டார்.

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை | Why Did You Give Up The Leadership Position Mavi

என்னைப் பொறுத்தவரை என்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தால் நான் பதவியில் இருந்து விலகினேன். இருப்பினும் நான் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுவேன்.

யாழ்ப்பாணத்தில் வெடிப்பு சம்பவம் : இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வெடிப்பு சம்பவம் : இளைஞன் படுகாயம்

அதேநேரம், கட்சியில் இருந்து பலர் வெளியேறி வெவ்வேறு தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கின்ற கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.இந்த நிலைமையானது எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சிந்தனையில் உள்ள தளத்தில் பயணிப்பதால் சற்று நிம்மதியாகவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எடுக்கப்போகும் நடவடிக்கை

எவ்வாறாயினும் இந்த தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறாகப் போட்டியிடுகின்றவர்கள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைக்கின்ற பணியை நான் தேர்தலின் பின்னர் முன்னெடுக்கவுள்ளேன். அவ்விதமான எனது செயற்பாடானது எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தில் முக்கியமானதாக இருக்க முடியும் என்றே கருதுகின்றேன்.

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை | Why Did You Give Up The Leadership Position Mavi

அந்தப் பணியை நான் நிச்சயமாக தொடருவேன். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிளவுகள் களையப்பட வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களையும் கட்சியுடன் இணைத்துப் பயணிக்க வேண்டியது அவசியமாகும். எனவே அதற்காக தேர்தலின் பின்னர் நிச்சயமாக செயற்படுவேன் என்றார்.

தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026