தந்தையின் நிகழ்வில் கோட்டாபய கலந்து கொள்ளாதது ஏன் - வெடித்தது சர்ச்சை
Basil Rajapaksa
Chamal Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55வது நினைவேந்தல் நிகழ்வின் விசேட நினைவேந்தல் உரை இன்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற போதிலும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அதில் கலந்து கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில், மொட்டு கட்சி அலுவலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில், கோட்டாபய ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஜபக்ச குடும்பத்தின் ஏனையவர்கள் பங்கேற்பு
எனினும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.
மகிந்தவின் பிறந்த தின நிகழ்வு
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவின் 74 ஆவது பிறந்த தின பொது நிகழ்வில் கோட்டாபய கலந்து கொண்டடை குறிப்பிடத்தக்கது.
