ஏன் நாடாளுமன்றம் செல்கின்றேன்? ரணில் வெளியிட்ட காரணம்
நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமை மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவே தான் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடிவு செய்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். "
நான் நாடாளுமன்றத்திற்கு வரத் திட்டமிட்டிருக்கவில்லை, ஆனால் நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமை காரணமாக நாடாளுமன்றம் செல்வதற்கு எனக்கு நிறைய அழுத்தம் இருந்தது" என்று முன்னாள் பிரதமர் ஒரு ஒன்லைன் நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
கொவிட் காரணமாக நிறைய பேர் இறந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “இந்த விஷயங்களைப் பற்றி நான் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், அதுவே முக்கிய காரணம்” என்றார்.
"அரசியல் ரீதியாக ஒரு அரசாங்கம் அதன் புகழை இவ்வளவு விரைவாக இழப்பதை நான் காணவில்லை, எதிர்க்கட்சிக்கு ஒரு மாற்றீட்டை வழங்க முடியவில்லை. இது ஒரு கடுமையான நிலைமை ”என்று முன்னாள் பிரதமர் மேலும் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் நேற்று ஒரு எம்.பி.யாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக சத்தியம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.