வோசிங்ரன் தூதர் இலங்கை பறப்பது ஏன்? அநுர நடுநிலைமை உச்சாடனம் செய்வது ஏன்?
இனத்தின் பொது அடையாளங்களுக்கு வரும் ஆபத்து வந்தால் எந்த தேசியஇனமாயினும் அங்கு தேசியஉணர்வு பிரவாகிப்பது பொதுவாகவே உலகில் காணக்கூடிய ஒரு நிலையாகும்.
இந்த நிலை இன்றைக்கு 37 வருடங்களுக்கு முன்னர் இன்றைய மார்ச் 19 இல் தனது உண்ணாநிலையை ஆரம்பித்து ஒருமாதம் கழித்து தியாகச்சாவடைந்த அன்னைபூபதிக்கும் பொருந்தும் அதேபோல தமிழகத்தில் கடந்தவாரம் நடந்த ஹிந்தி திணிப்புஎதிர்ப்பு போராட்டத்தில் உணர்வுமயப்பட்டு சென்னையில் தொடருந்து ஒன்றின் முன் பாய்ந்து படுகாயமடைந்து நேற்றிரவு மரணித்த மே 17 இயக்கத்தின் நிர்வாகி சிவா திலீபனுக்கும் பொருந்தும்.
இவ்வாறான திடீர் உணர்வு உந்துதல் தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியன. ஊக்குவிப்புக்கு உரித்துடையவை அல்ல! என்ற நிலை இருந்தாலும் இந்த முடிவுகளில் உள்ள தேசிய உணர்வை அகற்றமுடியாது.
தமிழர்களின் தேசியஉணர்வு சார்ந்த செய்திகள் இவ்வாறு அக்கரையிலும் இக்கரையிலும் இருக்க மத்திய கிழக்கின் சமகால போரின் நிழல்களம் இந்து சமுத்திரத்துக்குள்ளும் நுழைந்து இலங்கைக்கும் சிண்டு முடிவை உருவாக்கி உலகின் பெரும் எரிசக்தி நெருக்கடியாக அதுவும் இந்த போர் தனது 3வது வாரத்தில் நேற்று இன்னொரு நாசகார திருப்பத்தை எடுத்து அந்தப்பிராந்தியத்தில் உள்ள முக்கிய எரிசக்தி மையங்களில் கைவைக்கும் நிலைமைகளுக்குரிய சதிகளை அரங்கேற்றிவிட்ட பின்னணியில் இன்னொரு புதிய காட்சி இலங்கையில் தெரியப்போகிறது.
அதுவும் சிறிலங்கா அரசதலைவர் அனுர என்னதான் நடுநிலை நடுநிலை என குரல் கொடுத்தாலும் அவ்வாறான நடுநிலைகள் எல்லாம் இப்போதைக்கு ஒருபுறம் இருக்கட்டும் அப்பனே இதோ அமெரிக்க-சிறிலங்கா உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்த வருகிறேன் என அமெரிக்க சிறப்புத்தூதர் ஒருவர் இலங்கைக்குள் நுழைகிறார்.
இலங்கையை அண்டிய கடல்வழிகளை பாதுகாக்க, இலங்கை துறைமுகங்களில் நங்கூரமிட இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த, என பலமுனைகளில் இந்தபயணம் குறித்து வோசிங்ரன் தனது பட்டியலை அடுக்குவது சிறிலங்கா குறிப்பிடும் நடுநிலையை அடிக்கத்தலைப்படும் நிலையில் உலக உள்ளுர் நிலவரங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |