கணவருக்கு கொலை அச்சுறுத்தல்: மனைவியின் உருக்கமான கோரிக்கை
கிளிநொச்சியில் (Kilinochchi) தனது கணவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக பெண்ணொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இந்தநிலையில், பளையினை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்ய முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எமக்கு நீதி வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மோசமான வார்த்தை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 19 ஆம் திகதி செம்பியன் பற்று வடக்கு கடற்கரை பகுதிக்கு எனது கணவன் சென்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு ஒன்று வந்த நிலையில் அதில் எனது கணவன் விபத்துக்குள்ளாகி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு எனது மகள் சென்றார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் எனது கணவனை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் எனது மகளை மோசமான வார்த்தைகளால் பேசிவிட்டு அப்பாக்கு பெரிய பிரச்சினை இல்லை என கூறி அந்த இடத்தினை விட்டு விரட்டியுள்ளனர்.
சிறியளவு காயம்
பின்னர் எனது கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை, கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் தமது காரில் எற்றி சென்று விட்டு எனது கணவனை நடு வீதியில் விட்டு விட்டு சென்றனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னரே எனது கணவனின் அண்ணனுடன் எனது கணவனை சிகிச்சைக்காக வைத்தியசாலை அழைத்து சென்றேன்.
அதன் பின்னரே எனது கணவன் கண் விழித்து எனக்கு குறித்த தகவல்களை கூறினார்.
அவர் கூறியதாவது நான் விபத்துக்கு உள்ளான போது எனது காலில் சிறியளவு காயம் மட்டுமே இருந்தது.
பல தடவை
பின்னர் சிறிது தூரத்திற்கு அப்பால் காரில் வந்த பளையினை சேர்ந்த நபர் எனது காயப்பட்ட காலிற்கு மேல் பல தடவை காரால் ஏற்றினார் என தெரிவித்தார்.
இதற்கு பின்னரே எனக்கு தெரியும் இச் சம்பவம் எனது கணவனை கொலை செய்வதற்காக திண்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிய வந்தது.
அதன் பின்னரே என் கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை பார்த்த போது அவர் பல தடவை எனது வீட்டுக்கு முன்னால் விபத்து நடைபெற்ற நாள் சென்றார் என தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ய சென்ற போது முறைப்பாட்டினை என்னிடம் பதிவு செய்யவில்லை.
வாக்கு மூலம்
அத்தோடு, இன்றைய தினம் (23) எனது கணவனிடன் காவல்துறை வாக்கு மூலம் எடுக்க சென்று தாமாகவே வாக்குமூலம் எடுத்ததோடு எனது கணவனின் எந்த விதமான முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை.
எனது கணவனை தினமும் கொலைசெய்ய முயன்ற பளையினை சேர்ந்த நபர், அவரை பார்வையிட சென்று கடுந்தொனியில் மிரட்டுவது மற்றும் எனது உறவினர்களை வெட்டுவேன் என கூறி சென்றுள்ளார் இதற்கான ஆதாரங்களும் எம்முடம் உள்ளன.
விபத்து இடம்பெற்ற நாளிலிருந்து இது வரை நானும் எனது இரு பெண் பிள்ளைகளும் எமது வீட்டிற்கு செல்லவில்லை மற்றும் எனது பிள்ளைகள் பாடசாலை செல்ல வில்லை.
எமக்கு குறித்த நபரால் பயமாக உள்ளது, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார்.
பளை காவல்துறையினர் அவருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 7 மணி நேரம் முன்
