என் மனைவியிடம் கேளுங்கள் - அசண்டையீனமாக பதிலளித்த சுகாதார அமைச்சர்
People
Economy
Keheliya Rambukwella
SriLanka
By Chanakyan
இன்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் (Keheliya Rambukwella) ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதன்போது ஊடகவியலாளர், “ சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது” எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, “எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, எரிவாயு தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.
அதேவேளை போராடும் உரிமை மக்களுக்கு உள்ளது, எனினும், ஏதேனும் அரசியல் நோக்கில், ஜனநாயகத்துக்கு அப்பால் செல்லும் செயலை அரசியல் அடிப்படைவாதம் என குறிப்பிடலாம்.
‘அரசியல் அடிப்படைவாதிகள்’ என்பதே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி