வாக்குறுதிகளை நிறைவேற்றாத ரணில்: விக்னேஸ்வரன் எடுத்துள்ள அதிரடி முடிவு
அதிபர் ரணில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில்
அவருடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாளையதினம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் அதிபரால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.
கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
ஆகவே, நாளை நடைபெறவுள்ள அதிபரால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை அதிபருக்கு தெரிவிக்கவும் - என்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |