"நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது" நீதி அமைச்சர்
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயபாஸ ராஜபக்ச இன்று(15) யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.
இனங்களுக்கி்டையேயான நல்லிணக்கம்
அதன் காரணமாக தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது எனினும் நாட்டில் மேலும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படுமிடத்து நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண நாகவிகாரையில் தேசிய நல்லிணக்க சபையின் அங்கத்தவர்களுக்கான நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையில் நாகவிகாரையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மும்மத தலைவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |