ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் - புலனாய்வு பிரிவினரால் முற்றுகை
Ampara
Sri Lanka Police Investigation
By Dharu
அம்பாறை - பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், நேற்று (03) மாலை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்ததாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர் .
மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி