புத்தளம் -அநுராதபுரம் வீதியில் அதிகரித்துள்ள காட்டு யானைகள் - மக்கள் அச்சம் !
Anuradhapura
Puttalam
Elephant
By Pradheepan
புத்தளம் அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை (04.082023) 30 ற்கும் அதிகமான காட்டு யானைகள் சஞ்சரித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த வீதியால் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சஞ்சரிக்கும் அரிய வகைக் காட்சியை பார்வையிட்டனர்.
மக்கள் அச்சம்

குறித்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்கு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் இரவு வேளைகளில் மிகுந்த அச்சத்திற்கு மத்தியில் வெளியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.