ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்: வெளியான காரணம்
ரஷ்ய (Russia) பிராந்தியமொன்றில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், தைவா பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குறித்த பிராந்தியத்தின் ஆளுநர் ஒருவர் கூறுகையில், "நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையின் விளைவாக பைகெம்ஸ்கி (Piykhemsky), ச்செடி கொல்ஸ்கி (Chedi-Kholsky) மற்றும் டண்டிஸ்கி (Tandinsky) மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது.
காட்டுத்தீ
தீ சுமார் 7.7 சதுர மைல் பரப்பளவை சூழ்ந்துள்ளது. காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதற்கு அண்டை பிராந்தியங்களில் உதவி கோரப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் உள்ள சில பிராந்தியங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தைவாவும் அதில் ஒன்றாக இணைந்துள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
