அரசியலில் இருந்து விலகத் தயார் - இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தான் ஈடுபட்டது உறுதியானால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ (Arundika Fernando)தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் லொஹான் கனிஷ்க செனரத் பரணவிதானவை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று காலை இந்த சம்பவம் பற்றி அறிந்தேன். இதற்காக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முறையான விசாரணையின் பின்னர் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர் சங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதாக சம்பவத்தில் காயமடைந்த மாணவனின் தாயார், விசேட வைத்தியர் கலாநிதி கே.டி.சி.பரணவிதான தெரிவித்துள்ளார். "என் மகன் தனது முதல் ஆண்டில் தாக்கப்பட்டான்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி -மருத்துவ பீட மாணவர் மீதான தாக்குலின் பின்னணியில் இராஜாங்க அமைச்சர்
