இலங்கையின் விசா அமைப்பின் தரவு மீறலை அம்பலப்படுத்திய யூடியூபர்!
யூடியூப் வலைத்தளத்தில் (YouTube) இல் ட்ரேக்ட்ரெண்டி (TrekTrendy) என அழைக்கப்படும் பிரபல பயண ஆரவாளரான வில் டேவிஸ் (Will Devis), இலங்கையின் விசா வழங்கும் முறையில் ஏற்பட்டுள்ள தரவு மீறல் தொடர்பான எச்சரிக்கையை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முழுப் பெயர்கள், முகவரிகள் மற்றும் கடவுச்சீட்டு விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களுடன், சுற்றுலா விசாக்கள் அடங்கிய தினசரி மின்னஞ்சல்களை அவர் பெற்றதன் வாயிலாக புதிய விசா வழங்கும் முறையில் இடம்பெறும் தரவு மீறல்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நீண்ட காலத்திற்கு முன்பே விசா அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், விஎஃப்எஸ் குளோபலில் (VFX Global) இருந்து மற்ற விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
தரவு மீறல்
“உங்களில் சிலருக்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த இலங்கை விசா கதை நினைவிருக்கலாம். நீண்ட காலமாக என்னுடைய விசா அங்கீகரிக்கப்பட்டிருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் எனக்கு மற்ற சுற்றுலா விசாக்கள் முழுப் பெயர்கள், முகவரி மற்றும் கடவுச்சீட்டு தகவல்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது, இது ஒரு தரவு மீறலாக அல்லவா காணப்படுகிறது? இவற்றை நிறுத்த முயற்சிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்,” என்று வில் டேவிஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில், விஎஃப்எஸ் குளோபலில் (VFS Global) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்கும் நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன, சமூக ஊடகங்களில் காணொளிகளும் பரவலடைந்தது.
விசாரணைக்காக அழைப்பு
இதனால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, விஎஃப்எஸ் குளோபலில் (VFS Global) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) செயற்படுவதும் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது.
இதேவேளை, தற்போது இடம்பெற்றுவரும் விசா மோசடி தொடர்பான விசாரணைக்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று பொது நிதிக்கான குழுவின் (C0PF) முன்னிலையில் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |