ரணிலின் காலை வாருகிறது மொட்டு
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அதிபர் வேட்பாளராக நியமிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுனவில் பலம் வாய்ந்த குழு
தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய பலம் வாய்ந்த குழு தமது கட்சியில் இருப்பதாகவும், எனவே ஏனைய கட்சிகளை தமது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
