தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா..! நத்தார் பண்டிகையன்று வெளியிட்ட தகவல்
Ranil Wickremesinghe
Election
By Sumithiran
அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை
தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அதிபர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பொருளாதாரம்
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்