கோட்டாபயவுடனான சந்திப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்குமா இல்லையா!!
Srilanka Freedom Party
Gotabaya Rajapaksa
Maithripala Sirisena
Interim Government In Sri Lanka
By Kanna
அரச தலைவருடனான நாளைய சந்திப்பில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.
அரச தலைவருடன் சந்திப்பில் பங்கேற்க போவதில்லையென சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னர் அறிவித்திருந்தது.
இருப்பினும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதி நாளைய சந்திப்பில் பங்கேற்குமாறு கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி