மீண்டும் டீசலின் விலை அதிகரிப்பா? அரசாங்கத்திடம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை
People
SriLanka
Diesel
Diesel fuel
Ceylon Petroleum Corporation
Sumit Wijesinghe
Srilanka Economy
By Chanakyan
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumit Wijesinghe) தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்று120 ரூபாய்வினால் நட்டம் ஏற்படுகின்றது. ஆனால் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தும் நட்டத்தையே ஏற்படுத்தும்.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும்.
டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 ரூபாவினால் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி