ஐந்து நாட்களில் ரயில் சேவை தடைப்படுமா?
srilanka
fuel
crisis
train services
By Sumithiran
புகையிரத திணைக்களத்திடம் ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு மாத்திரமே உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும் எனினும் தற்போது அது சுமார் 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜெயசுந்தர தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பு குறைக்கப்பட்டுள்ள போதிலும், புகையிரத சேவைக்கு அது தடையாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் எரிபொருள் செலவில் ரயில்கள் இயங்குவதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்த அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் முறையை செயற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்