கோட்டாபயவின் கூட்டத்தை புறக்கணித்த அரசின் பங்காளிகள்
meeting
gotabaya
slpp
not attend
By Sumithiran
இன்றைய கோட்டாபய தலைமையிலான ஆளும் கட்சியின் கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிகளான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரசாங்கத்தில் சர்ச்சைக்குரிய நபராக மாறி வரும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பெற்றோலிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில்அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று விசேட அமைச்சரவை சந்திப்பொன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்