எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை - விமல் திட்டவட்டம்
இரட்டை குடியுரிமையுடையவர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்ற தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
மௌனமும் ஒரு குரல் என்று கூறப்படும் நிலையில் இரட்டை குடியுரிமையுடையவர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருந்தோம். குறித்த நிலைப்பாடு மாறாமல் இருக்கிறது. எனினும் பசில் ராஜபக்ச அல்லது வேறு எவரும் நாடாளுமன்றத்தில் நுழைவதற்குத் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
இதேவேளை, பொருளாதார சவால்களை பசில் ராஜபக்ச வென்றால் அது முக்கியமாக இருக்கும் எனக் கூறியுள்ள விமல், அவரால் பொருளாதார சவால்களைச் சமாளிக்க முடியுமா என்று தெரியாது. எனினும், அவரால் அவ்வாறு செய்ய முடிந்தால், அது இன்றியமையாததாக அமையும் என்றும் தெரிவித்தார்.