மகளிர் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய டெல்லி அணி..!
IPL 2023
By Dharu
மகளிர் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 223 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க வீராங்கனைகள் மெக் லென்னிங், ஷஃபாலி வெர்மா இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
இவர்களது இணைப்பாட்டம் 162 ஓட்டங்கள் குவித்தது. குறித்த போட்டியில் லென்னிங் 43 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
223 ஓட்டங்கள்
அவரைத் தொடர்ந்து ஷஃபாலி 45 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய மரிசன்னே கப் அதிரடியாக 39 (17) ஓட்டங்களும், ஜெமிமா 22 (15) ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 2 ஆட்டமிழப்புக்கு 223 ஓட்டங்கள் குவித்தது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி