பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள்: வெளியான காரணம்
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் 2022ஆம் ஆண்டு பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகப் பொருட்கள் செயலிழந்ததன் காரணமாக பாவனையிலிருந்து நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்
அத்தோடு, கடந்த வருடத்தில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயனற்றவை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருந்துகள் பழுதடைந்ததாகத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நோயாளிகள் பெரும்பாலான மருந்துகளை ஏற்கனவே பயன்படுத்தியிருப்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |