ரணிலின் கைதால் அதிரும் அரசியல் களம்: வெளியாகியுள்ள முக்கிய ஆவணம்!
உத்தியோகபூர்வமற்ற பிரித்தானிய பயணத்திற்காக அரச நிதியை பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் அவருக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பின் நகலை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது.
அழைப்பில் அந்த பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்டுள்ளதுடன், அதில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் முதல் பெண்மணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் மறுப்பு
அதன்படி, ரணில் விக்ரமசிங்க அரச நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்னதாக மறுத்திருந்ததையும் அக்கட்சி மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது தனது லண்டன் பயணத்திற்காக அரச பணத்தை செலவிடப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அழைப்பை காண கீழே செல்லவும்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
