பெட்ரோலை சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த இளம் பெண் கைது
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று(08) மாலை கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டிலின் கீழ் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட பெட்ரோல்
இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெட்ரோல் மீட்கப்பட்டது.

அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் குறித்த வழக்கு நாளை திங்கட்கிழமை(9) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
