வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி: பெண் கைது
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ராகம காவல் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (04.11.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹின்கெந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (05) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |