யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
கசிப்பு விற்பனை
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்தநிலையில், கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 2 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
19 மணி நேரம் முன்