யாழில் கிருமி தொற்றால் பெண் உயிரிழப்பு !
By Aadhithya
யாழில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடையவரே நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு அவதியுற்ற நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
ஆதார வைத்தியசாலை
இதனையடுத்து, அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவருக்கு ஈரல் பாதிப்படைந்து அதன் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தேசவிடுதலைக்காய் தம்முயிர் தந்தோரைப் பூசிக்கும் மாவீரர் வாரம் ஆரம்பம்… 4 நிமிடங்கள் முன்
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்