பபிள் டீ குடித்த பெண்: சிறுநீரகத்தில் இருந்து 300 கற்களை அகற்றிய மருத்துவர்கள்
தைவான் நாட்டிலுள்ள இளம் பெண்ணொருவருக்கு சிறுநீரகத்தில் இருந்து 300 கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியா யூ (Xiao Yu) என்ற 20 வயதான பெண் கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் 300 கற்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சி.டி ஸ்கேன் செய்து பார்த்த போது சியா யூ-வின் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் 5 மி.மீ முதல் 2 செ.மீ வரை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
அதே நேரத்தில் இரத்தப் பரிசோதனையில் அவளுக்கு வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது என தெரிவித்தனர்.
தைவான் நகரில் உள்ள சி மேய் மருத்துவ மையத்தில் மருத்துவர்கள் சியாவோவுக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்றினர்.
சிகிச்சையை மேற்கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லின் கயாங், சிறுநீரக கற்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தாததால் அல்லது கல்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ளாததால் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
பபிள் டீ
உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், சிறுநீரில் உள்ள தாதுக்கள் எளிதில் குவிந்து, கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.
பொதுவாக 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் கற்கள் உருவாகும் வாய்ப்பு பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இளம் பெண்ணுக்கு சிறுநீரக கற்கள் ஏற்பட்டதற்கு அவர் தண்ணீருக்கு பதிலாக அதிகம் பபிள் டீ குடித்ததே காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி இப்போது குணமாகியுள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |