சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
அம்பாறையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம், மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை
இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |