உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்: ஐந்து வருடங்களின் பின் நேர்ந்த பரிதாபம்!
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் (Sri Lanka Easter bombings) படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் ஐந்து வருடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு (Negombo), கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறித்த பெண் படுகாயமடைந்திருந்தார்.
273 பேர் உயிரிழப்பு
இதேவேளை அவரது மகன் துலோத் அந்தோனி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், திலினி ஹர்ஷனிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
நாட்டின் 8 இடங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 273 பேர் உயிரிழந்திருந்ததுடன் 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
