வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணமோசடி : பெண் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த பெண் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 40 இலட்சம் ரூபாயை அவர் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான பெண்ணினால் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதி பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |