மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்(படங்கள்)
தேயிலை கொழுந்து பரிந்து கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது பாரிய சவ்க்கை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் காவல்துறை பிரிவுட்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் இன்று(28() காலை 03ம் இலக்க தேயிலை தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலநிலை
இந்நிலையில், மரம் வீழ்ந்ததில் காயமடைந்த இரு பெண் தொழிலாளர்களும் டிக்கோயா கிழங்கன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நாள் சம்பளத்திற்காக நோர்வூட் பகுதியில் இருந்து டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் தோட்டப்ப குதிக்கு தொழிலுக்கு 15 தொழிலாளர்கள் வருகை தந்து தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மரம் அடியோடு சாய்ந்துள்ளதோடு இன்று காலை முதல் மலையகத்தில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அதேவேளை, காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண் தொழிலாளர்களும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் மேலதிக விசாரணைகளை நோர்வூட் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |