சீன விமான நிலையத்தில் சிக்கிய மர்ம வண்டுகள் : பெண்ணொருவர் அதிரடி கைது!
China
World
By Laksi
சீனாவில் உள்ள பையூன் விமான நிலையத்தில் பெண்ணொருவர் வண்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பயணியின் பெட்டியை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், பிளாஸ்டிக் தாள்களும், சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டறியப்பட்டன.
அன்னிய இன வண்டுகள்
இதனையடுத்து அவற்றுள் , உயர் கசாஸ் வண்டு, ஆரஞ்சு முதுகு வண்டு, அட்லஸ் வண்டு உட்பட 11 வகையான வண்டுகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வண்டுகள் அனைத்தும் சீனாவில் பூர்வீக வாழ்விடம் இல்லாத அன்னிய இனங்களாக கருதப்படுகின்றன.
அதிகாரிகள் பறிமுதல்
உரிய அனுமதியின்றி உயிருள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை நாட்டுக்கு கொண்டு வருவது சட்ட விரோதமானது என கூறி அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்