யாழில் திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் பெரு விரலில் மை
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சொத்துக்காக நடந்த மோசடி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து , வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , " தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கைவிரல் அடையாளம்
இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்த போது பெண்ணின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பெண்ணிடம் கைவிரல் அடையாளம் காணப்படுகின்றமை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |