யாழ். மானிப்பாயில் இடம்பெற்ற கோர விபத்து..! பெண் பலி - தொடரும் கைதுகள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
Death
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப்பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுடை சந்தியில் நேற்று (26.7.2024) ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் கைது
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இரு சந்தேகநபர்களை காவல்துறையினரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்