யாழில் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!
யாழில் கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், யாழ். (Jaffna) காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல்துறை
கன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணி புரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில், அதனை அங்கிருந்த குறித்த சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளார்.
கண்கானிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபர் இனங்காணப்பட்ட நிலையில், அவர் வீதியில் நடமாடுவதாக மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனடிப்படையில், குறி்த்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்
மேலதிக விசாரணை
இதன்போது, அவர் அந்த கைப்பேசியை இன்னொருவருக்கு விற்றதாக கூறியதையடுத்து காவல்துறையினர்,கைப்பேசியை வாங்கியவரையும் கைப்பேசியுடன் கைது செய்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த கைப்பேசி 76000 ரூபா பெறுமதி வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மேலதிக விசாரணையின் பின்னர் அவர்களை யாழ் நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |