கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
புதிய இணைப்பு
கொழும்பு (colombo) கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) மாலை பெண் ஒருவர் உட்பட இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் (colombo) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (25) மாலை கிராண்ட் பாஸ் - வடுல்லாவத்தை பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச்சசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணம் தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்