உயர் கல்வியை தொடர விபசாரத்தில் ஈடுபட்ட யுவதிகள் கைது
உயர் கல்வியை தொடர பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் விபசாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிகளுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அந்த இடங்களின் முகாமையாளர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையங்கள்
தலங்கமவில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பிரதான காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.
கடுவலை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய, காவல்துறை சார்ஜன்ட் 1445 பதுவத்த, காவல்துறை கான்ஸ்டபிள்களான 77090 பாலசூரிய 31867 ராஜகுரு, 92896 அகிலா ஆகியோர் பெண்களை கொள்வனவு செய்பவர்கள் போன்று வேடமணிந்து இளம் பெண்களை விற்பனை செய்யும் நான்கு நிலையங்களுக்குச் சென்று இரகசிய சமிக்ஞை ஒன்றின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிக்க
நான்கு இடங்களிலும் சோதனையிடப்பட்டு கைது செய்யப்பட்ட இளம் பெண்களிடம் விசாரணை நடத்திய போது, நிலவும் பொருளாதாரச் சூழலால் உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிக்க வசதியின்றி இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததாக சோதனையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
