வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம்

Sri Lankan Tamils Tamils International Women's Day
By Theepachelvan Mar 08, 2024 10:11 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

உலகில் பெண்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்த போராட்டமாக ஈழ விடுதலைப் போராட்டமே திகழ்கிறது. ஆணுக்குப் பெண் நிகர் என்று நவீன உலகில் பேசப்பட்ட தருணத்தில் ஆணைவிடப் பெண் மேலானவள் என்பதை ஈழ விடுதலைப் போராட்டம் இந்த உலகிற்கு செயல்களால் எடுத்துரைத்தது.

மாலதிகளாலும் அங்கயற்கண்ணிகளாலும் சோதியாக்களினாலும் நன்கறியப்பட்ட தேசத்தில் பெண் விடுதலை என்பது வீரத்தோடும் அறத்தோடும் பண்பாட்டோடும் நிகழ்ந்தேறியது.

வறட்டுத்தனமான சிந்தாந்தகளைப் பேசுவதை விடுத்து, வெறும் சொல் பேச்சைக் கடந்து ஈழப் பெண்கள் ஆற்றாலும் செயல்களாலும் ஈழ மண்ணுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

அனைத்துலகப் பெண்கள் தினம்

மார்ச் 8 உலக மகளிர் தினம். உலகம் முழுவதும் இந்த நாளில் பல்வேறு கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையில் இந்த நாளின் அர்த்தம் என்ன? அது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வியை இந்த நாளில் தெளிவுபடுத்துவது அர்த்தமுடையதாகும்.

வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் | Women S Day 2024 The Eelam Liberation Struggle

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அத்துடன் பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஐடபிள்யுடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நாள், 1908இல் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றவேளையில் சிந்தனை துளிர்விட்டது.

இந்த நாளை பன்னாட்டு நாளாக அறிவிக்கவும் அனுசரிக்கவும் வேண்டும் என்ற சிந்தனையை பொதுவுடமைவாதியும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவருமான கிளாரா ஜெட்கின் முன்வைத்தார். 1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கிளாரா ஜெட்கின் இவ் எண்ணத்தை பரிந்துரைத்தார். அதில் 17 நாடுகளை சேர்ந்த நூறு பெண்கள் இருந்தனர்.

எனினும் அனைத்துலகப் பெண்கள் தினம் முதன் முதலாக 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாப்பட்டது. அந்த வகையில் நூறு ஆண்டுகளைக் கடந்து இந் நாள் அனுசரிக்கப்படுகிறது.

மாலதி என்றொரு ஈழப் பெண்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மாவீரராக தமிழ் ஈழத்தின் முதல் பெண் மாவீரராக மாலதி அவர்கள் தமிழ் ஈழத்தில் பெண் விடுதலையின் முதன்மை அடையாளமாகும்.

வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் | Women S Day 2024 The Eelam Liberation Struggle

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட மாலதி அவர்களின் வீர மரணம், ஈழப் பெண்களின் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பெருந்தாக்கமாய் மாறிற்று. தமிழீழ விடுதலைக் களத்தில் பெண்கள் ஆற்றிய சாதனைகள், அன்றைய தமிழ் ஈழத்தின் சமூக எழுச்சிக்கும் ஆற்றலுக்கும் உயர்வுக்கும் பெருவழி சமைத்தது.

காயமடைந்த நிலையில், தொண்டைக் குழியில் நஞ்சுடன் “எனது துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்” என்ற அவரின் இறுதிக் குரல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றும் அடங்காத தீராத குரலாயிற்று. அன்றைய தமிழீழம் என்பது பெண்களுக்கு பேரிடத்தை வழங்கியது.

ஆண்களும் பெண்களும் சமம் என்ற சிந்தனையை தான் உலக நாடுகள் ஆகச் சிறந்த அடைவென்றும் உயர்வென்றும் கொண்டிருந்த நிலையில், ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்கள் என்பதை வரலாற்றினாலும் சரித்திரத்தினாலும் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.

இதனால் இரண்டாம் லெப் மாலதி, கப்படன் அங்கயற்கண்ணி, மேஜர் சோதியா, கஸ்தூரி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி என்று ஈழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் உலகின் முன்னூதாரணம் மிக்க பெண்கள் என மிளிர்ந்தனர்.

தமிழ் ஈழத்தில் பெண்ணெழுச்சி

அன்றைய தமிழ் ஈழத்தில் ஒக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்களின் எழுச்சி நாளாய் தனித்த அடையாளத்துடன் இருக்கும். பெண் போராளிகளின் அணிவகுப்பு, வீரப் பெண் தளபதிகளின் வழிநடத்தல் என்று ஈழ தேசம் எங்கும் தமிழீழ மகளீர் எழுச்சி நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெறும்.

வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் | Women S Day 2024 The Eelam Liberation Struggle

உண்மையில் சிறப்பு தினங்கள் என்பன வெறும் தினங்களாக மாத்திரம் அன்றிருக்கவில்லை என்பதையே இப் பத்தி சொல்ல விளைகிறது. இன்றைய காலத்தில் பல்வேறு தினங்களும் கொண்டாடப்படுகின்றன. பெயரளவில் தான் அந்த தினங்கள் இருக்கின்றனவே தவிர, அர்த்தம் அளவில் அந்த தினங்களுக்கு எதிரான நிலையில்தான் உண்மை இருக்கிறது.

அன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழக்கும் தேசமாக தமிழர் தேசம் இருந்தது. நள்ளிரவு வேளையிலும் ஒரு பெண் தனியாய் பயணம் செய்கின்ற சுதந்திரமும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது. அத்துடன் கொடிய போர்க்காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு அவலங்களையும் துயரங்களையும் எதிர்கொள்ளுகின்ற நடவடிக்கைகள், பயிற்சிகள் அன்றைக்கு இருந்தன.

பெண்களுக்கு போர்க்காலத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறிப்பாக தமிழீழ காவல்துறையில் பெண் காவல்துறைப் பிரிவு பெண்கள் சார்ந்த பல்வேறு நலன்களை முன்னெடுத்த கட்டிக்காத்த அமைப்பு என்ற பெருமையை வகித்தமை முக்கியமானது.

ஒரு இலட்சம் விதவைகள்

உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர். 85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் | Women S Day 2024 The Eelam Liberation Struggle

இதில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வடக்கு கிழக்கில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசின் குறிப்பிடத்தக்க சாதனை இதுவாகும். இந்த புள்ளி விபரத்தை இலங்கை அரசின் கணக்கெடுப்புகளின் வாயிலாகவே அறிகிறோம்.

அத்துடன், கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. போர் விதவைளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் இலங்கை அரசின் மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால் சிறுபான்மை ஈழத் தமிழர்களின் பெரும்பான்மையாக விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் வசிக்கின்ற நிலை வாயிலாக நாம் அவதானிக்க வேண்டிய செய்திகள் மிகவும் முக்கியமானது.

பெண்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகள்

போரில் அதிக ஆண்கள் கொல்லப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு என்றும் அங்கே தான் அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம் கூறுகின்றது. போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியல் நிலமை என்பது மிகவும் துயரமாகவும் போராட்டம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

வீரப் பெண் போராளிகளால் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் | Women S Day 2024 The Eelam Liberation Struggle

போரில் விதவைகளாகப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இந்த நிலவரம் குறித்து ஐ.நா இலங்கைமீது முன்வைத்த குற்றச்சாட்டாகும். இராணுவத்தால் நிரப்பப்பட்ட வடக்கு கிழக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அவலங்களும் இன்று மிகுந்த சிக்கல் கொண்டவை.

பெண்போராளிகள் காவல் செய்த நிலத்தில், விடுதலை அமைப்பை சிதைத்த பிறகான சூழல் என்பது மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. தன்னை சிதைத்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டுகிற சிறுமியொருத்தின் தேசமாக வடக்கு கிழக்கு இன்று மாறிவிட்டது.

இலங்கையிலும் உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கால்கள் தேயத் தேடும் தாய்மாரின் கண்ணீரின் மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட கணவன்மாரை கால்கள் தேயத் தேடும் பெண்களின் துயரத்தின் மத்தியிலும் தான் இந் நாளும் கொண்டாட்டமும் கடந்து செல்கிறது என்பதே துயரமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026