சாதகமான பதில் வேண்டும்! பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் (படங்கள்)
நுவரெலியா - அக்கரப்பத்தனை பெருந்தோட்ட பகுதியில் 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டமானது இன்று திங்கள்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்பட்டவில்லை என தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தின் போது தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் பாரிய பிரச்சினையாக உள்ளது. தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதனால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம். எனவே தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க, கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தியும் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பினால், தேயிலை தொழிற்சாலைகளும், தொழிற்சாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



