இந்திய அணியின் உலக கிண்ண கனவு பலிக்குமா!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரை ஆறாவது தடவையாகவும் வெற்றிகொள்ளும் இலக்குடன் இந்திய அணியை அதன் சொந்த மண்ணியில் அவுஸ்திரேலிய அணி எதிர்கொண்டுள்ளது.
இந்த தொடரில் எந்தவொரு லீக் ஆட்டத்திலும் தோல்வி அடையாத இந்தியா, அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
மறுபுறம் லீக் சுற்றில் இந்தியா, தென்னாபிரிக்காவிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்த போதிலும் பீனிக்ஸ் பறவை போன்று மீள் எழுந்து, அடுத்த ஏழு போட்டிகளிலும் வெற்றியை பெற்று அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
உலக கிண்ணப் போட்டிகள்
அரையிறுதியிலும் தென்னாபிரிக்க அணியை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை உலக கிண்ணப் போட்டிகள் என வரும் போது மிகவும் பலம்வாய்ந்த அணியாக மாற்றம் பெறும் வரலாறே காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்தப் போட்டியிலும் சரிவில் இருந்து மீண்டெழுந்த அவுஸ்திரேலியா இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவை எதிர்தாடிவருகின்றது.
மஹேந்திர சிங் தோனி
உலகிலுள்ள மிகப் பெரிய அஹமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்சமாக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இரசிகர்கள் நேரடியாக போட்டியை கண்டுகளிக்க முடியும்.
இந்தப் போட்டியானது உணர்வுரீதியான ஒன்றென்பதுடன், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் அழுத்தங்கள் உள்ளதை இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா ஏற்றுக்கொண்டுள்ளார்.
இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை வன்கடே மைதானத்தில் வைத்து இலங்கை அணியை வெற்றிகொண்டு, மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலக கிண்ணத்தை வெற்றிகொண்டிருந்தது.
இறுதிப் போட்டி
இந்தநிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது என கூறியுள்ள அவுஸ்திரேலிய அணித் தலைவர் பட் கமிங்ஸ், அஹமதாபாத் மைதானமானது, ஒரு பக்கத்திற்கு ஆதரவான இரசிகர்களை கொண்டிருக்கும் எனவும் அதனை அமைதிப்படுத்துவதை விட எதிரணிக்கு திருப்திகரமான ஒன்று வேறு எதுவும் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, இதுவரை இந்தியாவிற்கு எதிராக 83 வெற்றிகளையும் இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 57 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க்கில் நடைபெற்ற உலக கிண்ண இறுதிப் போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை 125 ஓட்டங்களால் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டிருந்தது.
இந்திய அணியை பொறுத்தவரை உபாதை காரணமாக ஹர்திக் பாண்டியா மாத்திரமே தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சமபலம் வாய்ந்த அணியாக காணப்படுகின்றது.
அரசியல் விமர்சகர்கள்
அந்த வகையில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
சகலதுறை வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ள அதேவேளை பந்துவீச்சாளர்களாக ஜெஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, குல்தீப் யாதேவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் விளையாடிவருகின்றனர்.
அவுஸ்திரேலியாவை விட ஒரளவு சிறந்த பந்துவீச்சு வரிசையை இந்திய அணி கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கு பலம்
அவுஸ்திரேலியா அணியும் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சிறந்த வீரர்களை கொண்ட அணியாகவே இன்றைய போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டுள்ளது.
பட் கம்மின்கஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோணர், ஸ்ரிவன் ஸ்மித், மர்னூஸ் லபுசேங், ஜோஸ் இங்லிஸ் ஆகியோர் துடுப்பாட்டவீரர்களாகவும் ட்ராவிட் ஹெட், மிச்சேல் மாஷ், க்ளன் மெக்ஸ்வெல் ஆகியோர் சலகதுறை வீரர்களாகவும் களமிறங்கியுள்ளனர்.
மிச்சேல் ஸ்டாக் மற்றும் பட் கம்மிங்ஸ் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற போதிலும் அவர்களும் பின்வரிசையில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவருகின்றனர்.
இவர்களை தவிர அடம் ஷம்பா மற்றும் ஜோஸ் ஹேசல்வூட் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக அவுஸ்திரேலியாவிற்கு பலம் சேர்த்துள்ளனர்.
இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |