உலக கிண்ண தகுதிச் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு படுதோல்வி
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலக கிண்ண தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் சிம்பாப்வேயில் இடம்பெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் , ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த சுப்பர் 6 தொடரில் இன்று இடம்பெற்று வரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களத்தில் இறங்கியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சார்லஸ் 0 ஓட்டங்களும், கிங் 22 ஓட்டங்களும், அடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் 0 ஓட்டங்களும், ஹோப் 13 ஓட்டங்களும், மேயர்ஸ் 5 ஓட்டங்களும், பூரன் 21 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அபார வெற்றி
இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர், ஷெப்பர்ட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ க்ராஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி உலக கிண்ண தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
அதே வேளையில் தோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
