நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும்

World
By Beulah Aug 20, 2023 07:30 AM GMT
Report

இன்று(20) உலகளாவிய நுளம்பு தினமாம். நுளம்பை எதிர்த்து போராடுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கடுமையான நோய்களை பரப்பும் பூச்சி வகைகளில் ஒன்றே நுளம்பு ஆகும்.

இவை, மலேரியா முதல் டெங்கு வரை மில்லியன் கணக்கான உயிர்களை இழக்க காரணமாக உள்ளன.

இத்தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 20 அன்றும் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் நினைவாக கொண்டாடப்படுகின்றது.

இதன்படி, இப்பதிவின் மூலமாக நுளம்பினால் ஏற்படும் நோய் நிலைமைகள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பினை பெறலாம் என்பது குறித்தும் பார்ப்போம். ​

நுளம்புகளால் உருவாகும் நோய்கள்​

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

மலேரியா, டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளையழற்சி, மேற்கு நைல் சிக்குன்குனியா,கேன்யன் வைரஸ், ஜிகா வைரஸ், குதிரை மூளை காய்ச்சல், ரோஸ் ரிவர் வைரஸ், லிம்பேடிக் ஃபைலேரியாசிஸ், ஈஸ்டர்ஸ்ன் ஈக்வினல் எக்க்விலிட்டிஸ், லாக்ரோஸ் என்செபாலிடிஸ் என மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

worldmosquitoprogram.org கூற்றுப்படி நுளம்புகளால் பரவும் நோய்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 700 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 10 இல் ஒருவருக்கு இந்த பாதிப்பு உண்டாகலாம்.

2023 இல் மூன்று மில்லியனுக்கும் அதிகமான டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ​

நுளம்புகள் உண்டாக்கும் பாதிப்புகள்

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

​ நுளம்புகள் மனிதர்களையும் விலங்குகளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கலாம்.

நேரடியான பாதிப்புகள்

இரத்தத்தை உறிஞ்சும் நுளம்புகள் இருக்கும் நிலையில் இரத்த இழப்பு உண்டாகலாம். கால்நடைகளில் மெதுவான வளர்ச்சி இருக்கலாம்.

நுளம்புகள் கடிப்பதால் அடிக்கடி வீக்கம், அரிப்பு மற்றும் இலேசான ஓவ்வாமை எதிர்வினைகள் உண்டாகலாம்.

மறைமுக பாதிப்பு

நுளம்புகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்க்கிருமிகளை கடத்தும் போது மறைமுக பாதிப்பு உண்டாகிறது.

மனிதர்கள் போன்று விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்பு உண்டாக்குகிறது. நுளம்பு கடியிலிருந்து தப்பிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.

அதற்கு என்ன செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

நுளம்பு விரட்டி​

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

நுளம்பு கடிப்பதை தடுக்க அவை பரவும் அபாயத்தை தவிர்க்க பயனுள்ள வழி பூச்சி விரட்டியை பயன்படுத்துவதே. இராசயனம் கலந்த திரவங்களுக்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டிகள் பாதுகாப்பானவை.

கைகளில் விளக்கெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய் போன்றவற்றை கை மற்றும் கால்களில் தடவி விடுங்கள்.நுளம்பு உட்செல்வதை தடுக்க உதவும்.

முழு ஆடை அணிதல்

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

நுளம்புகள் இரவு நேரங்களில் மட்டுமே கடிக்கும். ஆடை கைகளை முழுமையாக போர்த்தும் அளவு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

அடர்ந்த நிறங்கள் நுளம்புகளை ஈர்க்கும். வெளிர் நிற ஆடைகள் பருத்தி ஆடைகள் அணிவது நுளம்புகளை விலக்கி வைக்கும்.

குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும். ​

வீட்டை சுற்றி தண்ணீர் தேங்குவது நுளம்புகளை அதிகரிக்குமா?​

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

நல்ல நீரோ, கழிவு நீரோ எந்த நீரும் வீட்டை சுற்றி தேங்கவிடாதீர்கள். தோட்டம், தொட்டிகள் வாளிகள், திறந்த தண்ணீர் பாத்திரங்கள், பூந்தொட்டிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கியிருப்பது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை ஊக்குவிக்கும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தமாக உலர்வாக வைப்பதோடு டயர் போன்ற பொருள்களை அப்புறப்படுத்தவும் செய்யுங்கள்.

நுளம்பு வலை

நுளம்புகளால் பரவும் மோசமான நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் | World Mosquito Day Mosquito Diseases Prevention

நுளம்பு வலையின் கீழ் உறங்குவதும் நுளம்பு கடியை தடுக்க உதவும். நுளம்பு வலை பாதுகாப்பானது.

வலைக்குள் துளைகள் இல்லாததாக மட்டும் பார்த்து பயன்படுத்துங்கள். நுளம்புகள் நுழைவதை தடுக்க சரியான முறையில் நுளம்பு வலையை மூட வேண்டும்.

நுளம்பு வலைக்கு அதிக செலவும் ஆகாது குறைந்த விலையில் பாதுகாப்பை அதிகரிக்க செய்யும் நுளம்பு வலை அவசியம் உதவக்கூடும்.

மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். இந்த நேரத்தில் நுளம்புகள் சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த நேரத்தில் வீட்டில் இருப்பது அவசியம். அதே போன்று வீட்டில் நுளம்புகள் நுழைவதை தடுக்க நுளம்பு வலை பயன்படுத்துங்கள்.

ஜன்னல்களில் நுளம்பு வலை அமைப்பதன் மூலம் நுளம்பு வீட்டுக்குள் வருவதை தடுக்கலாம்.

வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப நுளம்பு கடியால் பரவும் நோய்களின் அபாயத்தை தவிர்ப்பது நல்லது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025