புற்றுநோயால் இடது காலை இழந்த பெண் படைத்துள்ள கின்னஸ் சாதனை
Cancer
By Sumithiran
புற்றுநோயால் இடது காலை இழந்த பெண் ஒருவர் தொடர்ந்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றநிலையில் கின்னஸ் சாதனை படைக்க உள்ளார்.
ஜாக்கி ஹன்ட்-ப்ரோஸ்மா, 46, ஜனவரி நடுப்பகுதியில் இருந்து தினமும் 26.2 மைல்கள் ஓடுகிறார். அவர் தினசரி செலவழிக்கும் நேரம் சுமார் 5 மணிநேரம்.
கடந்த சனிக்கிழமை அவர் தொடர்ந்து 104வது நாளாக உரிய தூரத்தை ஓடிமுடித்தார்.இது கின்னஸ் சாதனையாக இருக்கும் என நம்பப்படுகிறது, இதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அனுமதி பெற 3 மாதங்கள் ஆகும்.
ஜாக்கி ஹன்ட்-ப்ரோஸ்மா தென்னாபிரிக்காவில் பிறந்தார், பின்னர் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் வாழ்ந்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி