வரலாறு தெரியாத விஜய்க்கு பதிலே கூற தேவையில்லை..! இலங்கை தொழிலாளர் தரப்பு விசனம்

Vijay Sri Lankan Peoples Kachchatheevu
By Dilakshan Aug 28, 2025 03:15 PM GMT
Report

வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது பெறுமதி வாய்ந்த அமைச்சர் "கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது" என்று கூறவேண்டிய தேவை இல்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்றையதினம்(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கச்சதீவை மீட்க முயற்சிக்கும் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும், சீனாவிடம் பறிபோகும் தமது நிலத்தினை மீட்பதற்கு துப்பிருக்கிறதா என்றும் சுப்பிரமணியம் கேள்வியெழுப்பியுள்ளார்.

முத்துநகர் விவசாயிகளுக்கு விளக்கமறியல்!

முத்துநகர் விவசாயிகளுக்கு விளக்கமறியல்!

 

இந்தியாவை ஆக்ரமிக்கும் சீனா

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் அந்த கட்சியின் தலைவரான கத்துக்குட்டி அரசியல்வாதி விஜய், கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தம் என கூறியுள்ளார்.

வரலாறு தெரியாத விஜய்க்கு பதிலே கூற தேவையில்லை..! இலங்கை தொழிலாளர் தரப்பு விசனம் | Vijay Demanding Katchatheevu Sri Lankans Stance

இந்த விடயமானது கவலையாக இருந்தாலும் இது காலத்திற்கு காலம் அரசியல் இலாபம் கருதி பெரிய பெரிய காட்சிகளும்தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றுவதற்கும் அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்கும் செய்யப்படுகின்ற நாடகம்.

விஜய், இலங்கை - இந்தியாவிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான கருத்துக்களை கேட்டு அறியாமல் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமென சொல்லியிருக்கின்றமை தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடு.

பழம்பெரும் அரசியல் தலைவர்களுக்கும் தெரியும் கச்சதீவை இலங்கையிடமிருந்த இருந்து மீட்க முடியாது. கச்சதீவு விடயத்தினை அரசியலாக்கி தமிழக மீனவர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதே அவர்களுடைய நோக்கம். அதைத் தவிர இதில் வேறு எதுவும் கிடையாது.

இந்தியாவினுடைய ஒரு பக்கத்தை தான்தோன்றித்தனமாக சீனா கைப்பற்றி வருகின்றது. அதில் ஒரு இஞ்சி அளவு நிலத்தை கூட பறிப்பதற்கு துப்பில்லாத இந்திய அரசாங்கமும், தமிழக வெற்றி கழகமும் இலங்கையில் உள்ள கச்சதீவு தமக்கு சொந்தம் என்றும் அதனை திருப்பிப் பெறுவோம் என்றும் கூறுவது ஒரு வேடிக்கையான விடயம்.

ரணிலுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு: பதவி விலக காத்திருக்கும் எம்பி!

ரணிலுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு: பதவி விலக காத்திருக்கும் எம்பி!


சட்டவிரோத இழுவைமடி தொழில்

வரலாற்றினை விஜய் படித்திருக்க வேண்டும். அவருக்கு நான் சொல்லுகின்ற ஒரு புத்திமதி, கச்சதீவில் இருந்து இராமேஸ்வரம் ஏறத்தாழ 30 மைல் தொலைவில் உள்ளது. நெடுந்தீவில் இருந்து தொண்டி 30 மைல் தொலைவில் உள்ளது. 

வரலாறு தெரியாத விஜய்க்கு பதிலே கூற தேவையில்லை..! இலங்கை தொழிலாளர் தரப்பு விசனம் | Vijay Demanding Katchatheevu Sri Lankans Stance

கச்சதீவில் இருந்து கோதண்ட ரமர் கோவில் 30 மைல் தொலைவில் உள்ளது. ஆனால் தலைமன்னாரில் இருந்து 18 மைல் தொலைவிலே தனுஷ்கோடி இருக்கின்றது. ஏன் தனுஷ்கோடியை நாங்கள் எமது நாட்டினுடைய பகுதி என்று கூறவில்லை?

தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எமக்கும் இடையே நீண்ட காலமாக சட்டவிரோத இழுவைமடி தொழிலே ஒரு பிரச்சனை இருக்கிறது. அதற்கு கச்சதீவு பரிகாரமாக முடியாது. 

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதாக இருந்தால் சட்டவிரோத இழுவைமடி தொழிலை நீக்க வேண்டும்.

முடிந்தால் மத்திய அரசுடன் விஜய் பேசி, அவர்கள் மூலமாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்து எமது நாட்டின் ஒரு பகுதியான கச்சதீவை தருமாறு கேட்கலாமே தவிர மீட்க முடியாது. 

அரசியலுக்காக விஜய் கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கழன்று தனியே சென்ற தொடருந்து எஞ்சின்: நடு வீதியில் நின்ற பெட்டிகள்!

கழன்று தனியே சென்ற தொடருந்து எஞ்சின்: நடு வீதியில் நின்ற பெட்டிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025