இதை மட்டும் செய்தால் உடன் நீக்கப்படும் 25வீத வரி : இந்தியாவிற்கு நிபந்தனை விதிக்கும் அமெரிக்கா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தெடார்பாக வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளவை வருமாறு,
‛உக்ரைன்-ரஷ்யா போர் அடிப்படையில் மோடியின் போர் தான். காரணம், இன்று அமைதிக்கான பாதை டில்லியின் வழியாக தான் செல்கிறது.
உக்ரைன்-ரஷ்யா போருக்கு உதவும் இந்தியா
ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி போர் இயந்திரத்துக்கு இந்தியா உதவுகிறது. அந்த பணத்தை வைத்து தான் உக்ரைனியர்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளைக்கே இந்தியா மீது விதித்த வரியில் 25 சதவீதத்தை தள்ளுபடி செய்வோம்.
சீனா,ரஷ்யா உங்கள் நண்பர்கள் அல்ல
ஆனால் அவர்களை பாருங்கள். ஜனநாயக நாடுகளுடன் சாய்வதற்கு பதில், சர்வாதிகாரிகளுடன் கரம் கோர்க்கிறார்கள். பல காலமாக சீனாவுடன் போரில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். அக்சாய் சின் மற்றும் உங்களில் பல பிரதேசங்களை சீனா ஆக்கிரமித்தது.
சீனா உங்கள் நண்பன் அல்ல. ரஷ்யாவும் அப்படித் தான். இந்தியாவை நினைத்தால் குழப்பமாக இருக்கிறது. மோடி ஒரு சிறந்த தலைவர். ஜனநாயக நாடு இந்தியா. அவர்களா இப்படி இருக்கிறார்கள் என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழக்கின்றனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
