அவுஸ்திரேலியாவில் சாதித்த தமிழ் சிறுவன் ( படங்கள்)
australia
tamil boy
world record
By Vanan
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, அவுஸ்திரேலியா - சிட்னியைச் சேர்ந்த A.R.பிரிதீஷ் என்ற 12 வயதுச் சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்துள்ளார்.
குறித்த சிறுவன் கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



